Lesson 3: CONVERSATION-Introducing Others Flashcards
Me: Greetings Gayithri. How are you?
வணக்கம் Gayithri எப்படி இருக்கீங்க?
Ga: I am fine. How are you?
நான் நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?
Me: This is my friend Matthew.
இது என் பிரெண்ட் Matthew.
Me: Matthew is working with me.
Matthew என்னோட வேலை செய்யிறார்.
Ga: Greetings Matthew. I am very happy to see you.
வணக்கம் Matthew. உங்கள பார்த்தது ரொம்ப சந்தோஷம்.
Ga: Greetings Matthew. I am very happy to meet you.
வணக்கம் Matthew உங்கள சந்திச்சது ரொம்ப சந்தோஷம்.
Ma: Thank you. I am delighted too, Gayithri.
நன்றி. எனக்கும் மகிழ்ச்சி Gayithri.
Ga: What are you doing? Where?
நீங்க என்ன செய்றீங்க? எங்கே?
Ma: I am working in Sri Lanka.
நான் இலங்கையில் வேலை செய்யிறேன்.
Ga: Where are you (coming) from?
நீங்க எங்க இருந்து வர்றீங்க?
Ma: I am (coming) from America.
நான் அமெரிக்கால இருந்து வர்றேன்
Ga: Ok. Where do you live?
சரி நீங்க எங்க வசிக்கிறீங்க?
Ma: Here, I live in Colombo.
நான் இங்கே கொழும்புயில் வசிக்கிறேன்.
Ga: Please come to (my) home one day.
ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.
Ma: Ok. I will come.
சரி வர்றேன்.