Lesson 08 Flashcards
V: Good morning sir, please come in.
வணக்கம் ஐயா, உள்ளே வாங்க.
V: Good morning madam, please come in.
வணக்கம் அம்மா, உள்ளே வாங்க.
C: Good morning
வணக்கம்
V: What are you looking for sir/madam?
உங்களுக்கு என்ன வேணும் ஐயா/அம்மா?
C: Do you have shirts here?
உங்களிடம் ஷர்ட்/ சட்டை இருக்கா?
V: Yes sir, we have shirts on the first floor.
ஆமாம் ஐயா, மேல் மாடியில் இருக்கு.
C: How do I get there?
அங்கே எப்படி போக வேணும்?
V: You can go up this stairway.
இந்த படி வழியாக மேலே போங்க /ஐயா/சார்.
C: Okay, thanks.
அப்படியா, ரொம்ப நன்றி.
V: Welcome sir, what are you looking for?
வாங்க சார்/ஐயா உங்களுக்கு என்ன வேணும்?
C: I want to buy a shirt.
எனக்கு ஒரு ஷர்ட் வாங்க வேணும்.
V: Okay sir, what color do you want?
நல்லது சார்/ஐயா, உங்களுக்கு என்ன நிறம்/கலர் ஷர்ட் வேணும்?
C: I want a green colored shirt.
எனக்கு பச்சை கலர்/நிற ஷர்ட் வேணும்.
V: Sorry sir, we do not have a green colored shirt.
மன்னிக்கணும் ஐயா/சார். எங்களிடம்/எங்க கிட்ட பச்சை நிற/கலர் ஷர்ட் இல்லை.
C: So, what colors do you have?
அப்படியா, அப்போ என்ன கலர் ஷர்ட் இருக்கு?
V: We have blue, red, white, black, yellow colored shirts
எங்களிடம்/எங்க கிட்ட நீல கலர், சிவப்பு கலர், வெள்ளை கலர், கறுப்பு கலர், மஞ்சள் கலர் ஷர்ட் இருக்கு ஐயா/சார்.
C: Then, give me a blue colour shirt.
அப்படியா, சரி எனக்கு ஒரு நீல கலர் ஷர்ட் தாங்க.
V: Here sir, this will suit you nicely.
இந்தாங்க சார், இது உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும்.
C: Yes, this is beautiful. Thank you.
ஆம், இது ரொம்ப நல்ல இருக்கு. ரொம்ப/மிச்சம் நன்றி.
V: Madam, what do you want?
அம்மா, உங்களுக்கு என்ன வேணும்?
C: I want to buy a saree.
எனக்கு ஒரு சாரி/சேலை வாங்க வேணும்
V: What is the color of the saree that you are looking for?
உங்களுக்கு என்ன கலர் சாரி/சேலை வேணும்?
C: I want a red colored saree.
எனக்கு ஒரு சிவப்பு கலர் சாரி வேணும்.
V: Will you see if it looks good?
இந்த சாரி நல்லா இருக்கா அம்மா?
C: Yes, this looks good.
ஆம், இது நல்லா இருக்கு.
C: What is the price for this?
இது என்ன விலை?
V: Ten thousand rupees madam.
ந்த சாரி பத்தாயிரம் ரூபா அம்மா.
C: No, this is too expensive. I don’t want it.
இல்லை, இது எனக்கு வேணாம். விலை ரொம்ப அதிகம்/கூட.
V: Thank you sir, Thank you madam.
நன்றி சார்/ நன்றி அம்மா.