உயர்நிலை 3 மரபுத்தொடர்களும் இணைமொழிகளும் Flashcards
அவசரக் குடுக்கை
நிதானமில்லாமல், யோசிக்காமல் அவசரமாகச் செயல்படுவது, hasty, act rashly
அள்ளியிறைத்தல்
ஆடம்பரமாகச் செலவு செய்தல், spend a lot of money
இடங்கொடுத்தல்
அனுமதித்தல், lenient, allow something to happen
இரண்டுபடுதல்
பிரிவு ஏற்படுதல், split
இழுத்தடித்தல்
தாமதித்தல், procrastinate
எடுத்த எடுப்பில்
தொடக்கத்திலேயே, at the very start
ஒத்துப்பாடுதல்
ஒருவர் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ளுதல், agree to something said by someone
ஒற்றைக் காலில் நிற்றல்
பிடிவாதம் பிடித்தல், stubborn
ஓடியாடிப் பார்த்தல்
ஓய்வின்றி வேலை பார்த்தல், do work actively, without taking a break
கக்க வைத்தல்
உண்மையைச் சொல்ல வைத்தல், spit out the truth
கழித்துக் கட்டுதல்
வேண்டாதவை என்று தூக்கி வீசுதல், get rid of something
காது குத்துதல்
ஏமாற்றுதல், cheating someone
கை நனைத்தல்
விருந்து உண்ணுதல், eating at one’s house
கையைக் கடித்தல்
நெருக்கடியான நிலை, financial difficulty
தலைமேற்கொள்ளுதல்
பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல், to assume a responsibility
பழி வாங்குதல்
வஞ்சம் தீர்த்தல், take revenge
பெயர் பொறித்தல்
பெயரை நிலைக்கச் செய்தல், establish your name
பேச்சுக் கொடுத்தல்
உரையாடலைத் தொடங்குதல், small talk
விட்டுக்கொடுத்தல்
இணங்கிப் போதல், பிறருக்கு வழங்குதல், ஒத்துப்போதல், give in
வெட்டிப்பேச்சு
வீண் பேச்சு, useless chatter
அரை குறை
முழுமை பெறாத நிலை, incomplete
அறக்கப் பறக்க
மிகவும் அவசரமாக, rushing
ஊரும் பேரும்
அடையாளம், identity
எதிரும் புதிரும்
முரண்பாடானது, பகை, to be at opposite ends, conflicting point of view
ஏழை எளியவர்
வறுமையில் உழல்பவர்கள், poor
ஒட்டி உலர்ந்து
பல நாள் சாப்பிடாததால் உடல் மெலிந்திருக்கும் நிலை, skinny
ஒப்பு உயர்வு
ஒன்றுக்குச் சமமாகவோ அல்லது அதைவிட உயர்வாகவோ, equivalent to something or higher
கண்டது கேட்டது
பார்த்ததும் செவியுற்றதும், see and hear
நன்மை தீமை
நல்லதும் கெட்டதும், pros and cons
போரும் பூசலும்
போர், யுத்தம், conflicts and war
மேள தாளம்
மங்கள வாத்தியம், auspicious music
வரவு செலவு
வருமானமும் செலவும், income and expenditure