இனிய தொடர்கள் Flashcards
காலை கதிரவன்
கதிரவன் தக தக என்று எழுந்தான்
காலை சூரியன்
சூரியன் தன் பணியை செய்ய தொடங்கினான்
இரவு
அது இரவு நேரம். நிலா பால் போல ஒளி தந்துகொண்டிருந்தது
இயற்கை பறவைகள்
பறவைகள் சிறகடித்து பறந்தன
இயற்கை காற்று
காற்றில் மரங்கள் தலை அசைந்தன
பசி
பசி அவன் வயிற்றை கிள்ளியது
பசி நாக்கு
நாவில் எச்சில் ஊறியது
பசி நிறைவு
வயிறார உண்டான்
நேரம்
நேரம் போனதே அவனுக்கு தெரியவில்லை
உறவு (நகம்)
அவர்கள் நகமும் சதையும் போல பழகினார்
உறவு (உயிர்)
அவர்கள் உயிரும் உடலும் போல இணை பிரியாது இருந்தனர்
பொது (சிங்கப்பூர்)
சிங்கார சிங்கையில்
பொது (கேள்வி)
பல கேள்விகள் என் மனதில் உதித்தன
பொது (திருட்டு)
கையும் களவுமாக
பொது (முடிவு - ஆணி)
அந்த சம்பவம் பசுமரத்தாணி போல பதிந்தது
பொது (முயற்சி)
எண்ணம் ஈடேற மும்முரமாக பயிற்சி செய்ய ஆரம்பித்தான்
பொது (திருடன்)
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
சத்தம் (ஆள் இல்லை)
ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை
சத்தம் (செவி)
சத்தம் அவன் செவிகளை எட்டியது
நடை (சிங்கம்-கம்பீரம்)
கம்பீரமாக சிங்கத்தை போல நடை போட்டான்