004 Conversation Between Two Friends Flashcards
Murugan: Sundar, how are you?
முருகன்; சுந்தர் எப்படி இருக்க?
Sundar: I am fine. How are you?
சுந்தர்; நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கீங்க?
Murugan: I am fine too.
முருகன்; நானும் நல்லா இருக்கேன்
Sundar: Then how is everyone at home?
சுந்தர்; அப்பறம், வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?
Murugan: Everyone is fine 1
முருகன்; எல்லரும் சௌக்கியமா இருக்காங்க
Murugan: Everyone is fine 2
முருகன்; எல்லரும் நல்லா இருக்காங்க
Murugan: We are meeting after 10 years are we not? How happy it is for us!
முருகன்; பத்து வருஷத்துக்கு அப்பறம் பாக்கறோம்…இல்ல? எவ்வளோ சந்தோஷமா இருக்கு!
Sundar: Did you come by auto rickshaw from the airport?
சுந்தர்; ஏர்போர்ட்டில இருந்து ஆட்டோலயா வந்த?
Murugan: No, I came by taxi
முருகன்; இல்ல, டாக்ஸில வந்தேன்
Sundar: Keep your bags here. It is our home. You don’t have to hesitate.
சுந்தர்; பை எல்லாம் இப்படி வை, நம்ம வீடு இது. ஏதும் யோசிக்க வேணாம்
Sundar: And here is the bathroom. You can freshen up. (lit: You can wash your legs and hands)
சுந்தர்; அப்பறம், bathroom இங்க இருக்கு. கை கால் அலம்பிக்கலாம்
Murugan: Ah…that’s okay. I will manage that.
முருகன்; ஆ…பரவாயில்ல. அதெல்லாம் நான் மாத்துக்கறேன்
Sundar: Viji, bring water
சுந்தர்; விஜி தண்ணி கொண்டு வா
Murugan: Hello how are you?
முருகன்; வணக்கம் எப்படி இருக்கீங்க?
Viji: I am fine
விஜி; நான் நல்லா இருக்கேன்
Sundar: Here, first of all drink water…ah…will you have tea or coffee?
சுந்தர்; இந்தா…முதல்ல தண்ணி குடி…ஆ…டீ சாப்பிடறயா…இல்ல காபி சாப்பிடறயா?
Murguan: Coffee will do
முருகன்; ம்ம்ம்…காபி போதும்
Murugan: Add less sugar in the coffee Sundar
முருகன்; காபீல சக்கர கம்மியா போடு சுந்தர்
bag/luggage
பை
Home
வீடு
Happiness
சந்தோஷம்
Wellness/Good health
சௌக்கியம்
From
இருந்து
Year
வருஷம்
To think
யோசிக்கறது
Hand/arm
கை
Leg/foot
கால்
To wash
அலம்பறது
That’s okay/no issues
பரவாயில்ல
Water
தண்ணி
Sugar
சக்கரை
Our
நம்ம